Saturday, August 17, 2013

முதல் முறையாக யாழில் நடைபெற உள்ள மோட்டார் பந்தய நிகழ்வு!

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக மோட்டார் பந்தய நிகழ்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(17.08.2013) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மோட்டார் பந்தைய நிகழ்வினை மோட்டார் பந்தய அமைப்பு, ஆசிய மோட்டார் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கால்டன் மோட்டார் விழையாட்டுக் கழகம் நடாத்துவதுடன் இதற்கான ஏற்பாடுகளை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் செய்கிறது.

இந்த நிகழ்வுகளில் துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், மோட்டார் பந்தயம் ஆகிய பிரிவுகளாக இடம்பெறவுள்ளதுடன் துவிச்சக்கர வண்டி ஓட்டத்தில் பங்கு பற்ற விரும்பும், ஆண் பெண் எதிர்வரும் (10.09.2013) திகதிக்கு முன்னரும் மரதன் ஓட்டங்களில் பங்குபற்ற விரும்பும் ஆண் பெண் வீரர்கள் தமவிண்ணப்பங்களினை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக விண்ணப்பதாரி 16 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதுடன் தனது மருத்துவச் சான்றிதழினை ஒப்படைத்தால் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும்.

இவற்றில் பெண்களுக்கான 15 கிலோ மீற்றர் மரதன் ஓட்டமும் ஆண்களுக்கு 22 கிலோமீற்றர் மரதன் ஓட்டம் நடைபெறுவதுடன் 35 கிலோ மீற்றறை கொண்ட பெண்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓட்டமும் ஆண்களுக்கான 110 கிலோமீற்றர் துவிச்சக்கர வண்டி ஓட்டமும் மோட்டார் பந்தயமானது 200 கிலோ மீற்றர் தூரத்தினுள் வெவ்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களினை இல.52, ஸ்டான்லி வீதியில் உள்ள அலுவகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெறும் முதல் 5போட்டியாளர்களுக்கு பணப்பரிசும் துவிச்சக்கர வண்டி போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் 10 ஆறுதல் பரிசுகளும் வளங்கப்படவுள்ளதுடன் 14,மற்றும் 15 திகதிகளில் இரவு யாழ் மாநகரசபை திடலில் அக்கினி இசைக்குழுவும் நடைபெறவுள்ளது.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் 512ஆம் படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித் பல்லேவல, 51ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் அபயநாயக்க, கால்டன் மோட்டார் விழையாட்டுக் கழகத்தின் தலைவர் டினேஸ் ஜெயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment