பெண்களுக்கு ஏற்படும் வதைகள் பற்றி சர்வதேச ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்! - ரோஸி
இலங்கையில் பெண்களுக்கு எதிரான வதைகள் பற்றி சர்வதேச ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகிறார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ரோஸி குறிப்பிடும் போது, ‘இலங்கையில் ஒவ்வொரு 90 செக்கன்களுக்கு ஒரு தடவை இந்நாட்டுப் பெண்ணொருத்தி வதைக்கு உள்ளாகின்றாள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நீதிமன்றிலும் பெண்களுக்கு எதிரான வதைகள், வன்முறைகள் பற்றி வழக்கு விசாரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. என்றாலும் குற்றவாளிகளில் சிலருக்கே தண்டனை வழங்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இவ்விடயத்தில் சர்வதேச ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றுவரை இந்நாட்டுப் பெண்கள் ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய உதவிகளினூடுதான் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment