மடியில் வைத்து மடிக்கணினியை பயன்படுத்தினால் என்ன வெல்லாம் ஏற்படும்!
மடியின் மீது லேப்டாப்பை அதிக நேரம் வைத்துப் பயன்படுத்துவதால் ஏதேனும் பிரச்னை வருமா? என்ற பல கேள்விகள் பல திசைகளில் இருந்தும் தினம தினம் வந்தவண்ணம் இருக்கிறது இதற்கு பதில் சொல்கிறார் தோல் நோய் மருத்துவர் ரத்னவேல்.
லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது இதற்கு காரணம் அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி சிவந்து போகும் பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும் காலப்போக்கில் அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும் எனக்குறிப்பிட்டார்.
காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் குளிரிலிருந்து தப்பிக்க, ஒரு பானை நிறைய நெருப்பைப் போட்டு அதை வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொள்வார்கள். அப்போதைக்கு குளிரில் இருந்து தப்பித்தாலும் நெருப்பால் உண்டான காயம் தோலில் தடிமனான ரோஸ்ட் போல தங்கிவிடும்.இதுதான் ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’ இது போன்ற பாதிப்பு லேப்டாப் பயன்படுத்துவோருக்கும் வருகிறது.
லேப்டாப்பில் காரீயம் சேர்த்திருப்பார்கள் அதிக நச்சுத்தன்மை நிறைந்த இந்த கனிமம் உடலுக்கு பல ஆபத்துகளை உருவாக்குவதுடன் கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்ற அலர்ஜியை உருவாக்குகிறது இதனால் கொப்புளம், அரிப்பு, தோல் தடிப்பு போன்ற நோய்கள் வருவதுடன் லேப்டாப்பை தொடர்ச்சியாக அருகில் வைத்து பார்ப்பதால் கண்ணுக்கு அடியில் ரத்த ஓட்டம் குறைந்து, கருவளையம் நிரந்தரமாகத் தங்கிவிடும்.
மடியின் மேல் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கபன்படுத்துங்கள் ஆனால் அரைமணி நேரத்துக்கு மேல் வேண்டாம். துணி, தலையணை, பிளாஸ்டிக் பொருட்களின் மீதும் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவது ஆபத்தானது. லேப்டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இப்போது சிறிய ஃபேன் கொண்ட ‘கூலிங் பேடு’ உபகரணங்கள் வந்துவிட்டது.
0 comments :
Post a Comment