பிள்ளைக்குப் பயந்து பறந்துவிட்டார் ஜனாதிபதி!
அரசாங்கத்தின் அழைப்பிற்கிணங்க இந்நாட்டுக்கு வருகைதந்துள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதன் பிள்ளை இலங்கைக்கு கால் அடி எடுத்துவைக்கும் போது, அவருக்கு முகங்கொடுக்க முடியாமல் திருட்டுத்தனமாக அரசாங்கத்தின் தலைவர் இந்நாட்டை விட்டு வெளிநாடு சென்றுவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடுகிறது.
அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது குறிப்பிடுகையில், ஐரோப்பிய சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இறுதி ஏகாதிபத்திய நாடான பெலரஸ் நாட்டுக்கு ஜனாதிபதி சென்றதன் மர்மம் என்னவென்று தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நவநீதன் பிள்ளைக்கு முகம் கொடுப்பதை விட்டு இவ்வாறு நாட்டை விட்டு பறந்துவிடுவது எவ்வித்த்தில் நியாயமாகும் எனவும் பொதுச் செயலாளர் அங்கு வினா தொடுத்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment