இபோச சாரதியைத் தாக்கிய அமைச்சர் கைது!
தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ. உபுல் தங்கல்ல இபோச சாரதியொருவரைத் தாக்கியது தொடர்பில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் நேற்றுக் (31) காலை தங்கல்ல பொலிஸில் ஆஜரனாதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் குறிப்பிடுகிறது.
குறித்த தாக்குதல் நேற்று முன்தினம் மாலை நேரம் நிகழ்ந்திருப்பதுடன், காயத்திற்குள்ளான சாரதி தங்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சாரதி தாக்குதலுக்கானது தொடர்பில் அமைச்சருக்கு எதிராகக் கோசம்எழுப்பிய இபோச தங்கல்ல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment