Saturday, August 10, 2013

உங்கள் ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?

ஜிமெயிலுக்கு Backup தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம் உண்மைதான ஜிமெயில் தரும் 10 ஜிபிக்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா?

இதோ ஜிமெயில் தான் நம் மின்னஞ்சல்களை தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் உங்கள் மனதில் தோன்றும்.

நம் முக்கிய ஆவணங்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம் அல்லவா அதிலும் குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்தும் வைத்துள்ளன.

எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும் எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு Backup எடுப்பது போல ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் Backup எடுத்து வைப்பது நல்லது.

இதற்கான இணையத்தில் புதிதாக கிடைக்கிறது ஜிமெயில் Backup என்னும் புதிய மென்பொருள் இதனை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம் உங்களுக்கு தேவையான கோப்புகளை Backup செய்துகொள்ள முடியும்.

இவை குறித்த மேலதிக தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com