இலங்கையின் Airtel வியாபார நடவடிக்கைகளை Etislat இற்கு விற்க நடவடிக்கை...!
பாரதி எயார்டெல் நிறுவனத்தின் இலங்கையின் வியாபார நடவடிக்கைகளை ஐக்கிய அராபி இராச்சியத்திற்குச் சொந்தமான எடிசலாட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு ஆவன செய்துவருவதாக செய்திகள் கசிந்துள்ளன.
அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடந்தேறிவருவதாக இந்தியாவின் 'த இகோனோமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. அதுதொடர்பில் ஸ்டேண்டட் சார்டட் வங்கி ஆலோசனை வழங்கிவருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எயார்டெல் நிறுவனத்தின் இந்நாட்டு வியாபார நடவடிக்கைகளின் பெறுமதி 110 மில்லியன் டொலருக்கும் 130 மி்ல்லியன் டொலருக்கும் இடைப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
பாரதி எயார்டெல் நிறுவனம் 300 மில்லியன் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளபோதும், வாடிக்கையாளர்களை அதற்கேற்ப ஈர்த்துக்கொள்ளவில்லை. 17 இலட்சத்திற்குள்ளேயே வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர் என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment