Thursday, August 29, 2013

விமான இறக்கை மீது பயணித்து சாதனை படைத்த 9 வயது சகோதரிகள்!

பிரித்தானியாவைச் சேர்ந்த 9 வயதான ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற இரு சகோதர சிறுமிகள் விமானத்தின் இறக்கையில் நின்றவாறு பயணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி யுள்ளனர்.

இச்சகோதரிகளின் குடும்பத்தில் விமானத்தின் இறக்கை யில் நின்று பயணிக்கும் 3ஆவது சந்ததியினராம் இச் சாதனை பயணத்தினை 6 வயதிலிருந்தே மேற்கொள்ள இவர்கள் ஆர்வமாக இருந்துள்ளனர் ஆனால் தற்போது இந்த ஆபத்தான சாதனையை தசை தேய்வு தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது தோழன் எல்லியின் உயிரைக் காப்பாற்ற நிதி சேகரிக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு பயணமாகவே இதனை மேற்கொண்டுள்ளனர்

தனது இந்த பயணம் தொடர்பாக பேசிய ரோஸ் இப்பயணம் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. உண்மையில் அது எவ்வாறானது என விபரிப்பது கடினமானது எனினும் இந்தப்யணம் பறவை பயணித்தது போல இருந்ததுடன் உயரத்தில் செல்லும் போது சற்று பயமாகவும் இருந்ததாக குறிப்பிட்டார்.


இதே வேளை ‘நாங்கள் இருவரும் இணைந்து இளவயதில் விமான சிறகில் பயணித்தவர்கள் என்ற சாதனையுடன் எல்லிக்கும் உதவுவதற்கு முன்வந்தோம் எனினும் இது கடும் இரைச்சலான பயணமாக இருந்தது’ என பிளேம் கூறியுள்ளார்

எல்லியின் தாயும் , தசை தேய்வு தொடர்பான சிறுவர்ளுக்கு உருவாக்கப்பட்டுள்ள டச்சன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட் அறக்கட்டளை அமைப்பின் நிறுவுனருமான எமிலி க்ரொஸ்லி கூறுகையில், ‘இச்சாதனையுடன் எங்களது அறக்கட்டளை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்திய இந்த சிறுமிகளால் நாங்கள் பெருமையடை கின்றோம் என்றார்.

மணிக்கு 100 கி.மீ வரை வேகமான விமானத்தைச் செலுத்தியது அவர்களது தாத்தாக்களாகும்.

No comments:

Post a Comment