Monday, August 5, 2013

எல். ரி. ரி. ஈ.யினரின் சிறை முகாம்களிலிருந்த 80 தமிழர்களை எரித்து கொலை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது!

எல். ரி. ரி. ஈ.யினரின் சிறை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 80 தமிழர்கள் எரித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவரைக் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர் பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஜயரத்தினம், மற்றும் இராணுவ கப்டன் உட்பட 80 தமிழர்களைக் கொன்று, எரித்தமை தொடர்பாகவே குறித்த நபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு, வல்லிபுனம் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிய அல்பா. 5, அல்பா-2, எல். ரி. ரி. ஈ. சிறை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை எல். ரி. ரி. ஈ யினர் இவ்வாறு படுகொலை செய்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்களுள் 30 பேர் 2006 மே மாதத்தில் ஒட்டுசுட்டான் காட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன் மற்றய 50 பேரும் இதே இடத்திலேயே ஜுலை மாதத்தில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயரத்தினம் எல்.ரி.ரி.ஈ. யினரின் "இஸ்டர்" என்ற பெயருடைய ஆஸ்பத்திரியின் பின்னாலுள்ள காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இராணுவ கப்டன் விஸ்வமடு பகுதியில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு 2009 - ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கொலைகளுடன் தொடர்புடைய மற்றும் மூவரும் தற்போது கைதாகியுள்ளனர் எனவும் கொலையுண்டவர்கள் மற்றும் எரிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக மாஜிஸ் திரேட் விசாரணைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment