இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 75 வீடுகள் மற்றும் 66 காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அரியாலை பிரதேசத்தில் 35 வீடுகளும், 24 காணிகளும் கையளிக்கப்பட்டவைகளில் உள்ளடங்குகின்றன. கோலம் புதூர் பிரதேசத்திலுள்ள 17 வீடுகளும், 6 காணிகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், அராலி மற்றும் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
512 ஆவது படைப்பிரிவு மற்றும் 514 ஆவது படைப்பிரிவினர் குறித்த வீடுகளையும், காணிகளையும் பயன்படுத்தி வந்தனர். கோப்பாய் பிரதேசத்திலுள்ள 23 காணிகளும், 42 வீடுகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 1995 ம் ஆண்டு ரிவிரெச படை நடவடிக்கைகளின்போது, குறித்த வீடுகளும், காணிகளும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக வட மாகாண படைகளின் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment