இந்திய மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹோர் மாவட்டத்தை சேர்ந்த மகன்லால் பரிலா வறுமையால் தனது இரு மனைவிகள் மற்றும் லீலா(6), சவீதா(5), ஆர்த்தி(4), பூல் கன்வர்(2), ஜமுனா(1) என்ற 5 மகள்களின் தலையை கொடூரமாக வெட்டி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வறுமையின் பிடியில் இருந்த இவருக்கும் இவரது மனைவிகளுக்கும் இடையே 2010ம் ஆண்டு யூன் 11ஆம் திகதி ஏற்பட்ட சண்டையில் கோபம் அடைந்த மகன்லால் கோடாரியை எடுத்து தனது 5 மகள்களின் தலையை வெட்டி கொலை செய்தது தொடர்பான வழக்கில் மகன்லாலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் தனக்கு வதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மகன்லால் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் மகன்லாலின் கருணை மனுவை கடந்த யூலை 22ம் திகதி நிராகரித்தார்.
இதனைத் தொடர்ந்து மகன்லாலுக்கு தூக்கு தண்டனையை ஓகஸ்ட் 8ம் திகதி நிறைவேற்ற சேஹோர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment