இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் இந்தி்ய இராணுவத்தினருக்கும் பாக்கிஸ்தான் இராணுவத்தினருக்குமிடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெறுவது யாவரும் அறிந்தது. அந்த வரிசையில் ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காலையும் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. 20 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவ சீருடை தரித்த குழுவினர் அதிகாலை 2 மணி அளவில் இந்திய நிலைகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி பலியாகி உள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் இத்தாக்குதல் தொடர்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டனத்தில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இன்னும் விழித்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 15 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவக் குழு திடீரென இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, சீனா ஊடுருவுகிறது.. பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் உயிரிழந்த வீரமிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.
மறுபுறத்தில் பாக்கிஸ்தான் இத்தாக்குதலுக்கும் தமக்கும் எத்தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளது, இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்தியில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த ஒரு தாக்குதலையும் தமது ராணுவம் மேற்கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளே மேற்படி மறுப்பை வெளியிட்டுள்ளனர், அப்படி ஒரு சம்பவமே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடைபெறவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவம் எந்த ஒரு யுத்த நிறுத்த மீறலையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் பாக்கிஸ்தான் எல்லையில் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு எல்லை தளபதிகளுக்கு ராணுவ தலைமை தளபதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாக்யுள்ளது.
பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் வகையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை மேற்கொண்டால் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அப்பகுதி ராணுவ தளபதிகளுக்கு தலைமை தளபதி பிக்ரம்சிங் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
இது தொடர்பாக அவர் கூறுகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருக்கும் தளபதிகள் அனைவரும் கடுமையான ஆத்திரத்தில் இருக்கின்றனர்.
ஆத்திரமூட்டும் பாகிஸ்தானின் செயலுக்கு பதில் தாக்குதலே பாதுகாப்பானது எனக் கருதுகின்றனர். அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்திய வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் கொன்றது கொடூரமானது. பாகிஸ்தான் சொல்வது போல 6-ந் தேதி நாம் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனா பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான இடத்தில் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கும் உரிமை உண்டு.
பாகிஸ்தானின் நடவடிக்கை மன்னிக்க முடியாது என்றும் இது போர் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்ட ஹேமராஜின் தலையை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment