வடக்கை சேர்ந்த 45 தமிழ் யுவதிகள் இன்று இராணுவத்தில் இணைகின்றனர்!
வடக்கின் 45 தமிழ் யுவதிகள் இன்று இராணுவத்தில் இணை ந்துகொள்ளவுள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த யுவதிகளே இன்றைய தினம் இராணுவ சேவையில் இணைந்துகொள்ளவுள்ளனர்.
"ஒரே நாடு ஒரே இனம்" என்ற அடிப்படையில், தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைத்துக்கொள்ளப் படவுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த யுவதிகளின் பெற்றோரால் அவர்களை இராணுவ சேவைக்காக ஒப்படைக்கும் நிகழ்வு இன்று வன்னி பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இராணுவ படையணியின் பிரதானி மேஜர் ஜெனரல் கிருஷாந்த சில்வா தலைமையில் அது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இராணுவத்தின் பெண்கள் படையணியில் குறித்த யுவதிகள் இணைத்துக்கொள்ளப் பட்டமைக்கான சான்றிதழ் அவர்களின் பெற்றோருக்கு வழங்கப்படவுள்ளது.
1 comments :
நவநீதம்பிள்ளை வீராங்கனை இல்லை.
இந்த 45 இலங்கை தமிழ் யுவதிகளே தமிழ் வீராங்கனைகள்.
Post a Comment