Friday, August 9, 2013

32 இரண்டு மருத்துக் குணம் நிறைந்த வெள்ளரி!

மருத்து பயன்பாடுடைய பலககையான மரக்கறி வகைகள் காணப்பட்டாலும் இவற்றில் எல்லாம் விட முதல்நிலையில் அதிக மருத்து பயன்பாடு உடைய ஒரு மரக்கறி யாக நாம் கடிததுச் சாப்பிடும் வெள்ளரிக்காய் காணப்படுகிறது எனினும் எம்மைப்பொறுத்த வரை வெள்ளரியின் முழுப்பயன்பாட்டையும் அறியாதவார்களாக நாம் இருக்கிறோம் எனவே நாம் ஒரு முறை வெள்ளரியின் மருத்துவக்குணம் பற்றி ஆராய்வோம்.

1. நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.

2. உடலைக் குளிரவைக்கும்.

3. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதி.

4. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் இப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

5. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர்சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. எனவே செரிமானம் தீவிரமாகும். பசிஅதிகரிக்கும்.

6. மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும்.

7. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும்.

8. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

9. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும்,மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

10. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

11. பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான தலை சுற்று, பித்த வாந்தி இவைகளை குணப்படுத்தும்

12. சமீபத்திய ஆய்வுகளின் படி வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது

13. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும்.

14. வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சைசாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம்பெறும்.

15. வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறியபின் கழுவி வர முகம் பளபளப்பு அழகு பெறும்.

16. வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும்.

17. வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும்.

18. இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

19. வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும்.

20. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும்.

21. தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும்.

22. வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.

23. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும்.

24. வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

25. வெள்ளரிக்காயைத்தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும்

26. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள்,நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

27. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் கருவளையம் மறையும்.

28. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

29. கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.

30. சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.

31.உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.

32. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது.

முக்கிய குறிப்பு நுரையீரல் கோளாறுகள்,இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச்சாப்பிடுவது நல்லதல்ல.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com