Wednesday, August 28, 2013

வீரர்களின் செயலால் சிறைவாசம் அனுபவிக்கப்போகும் பயிற்சியாளர்களும் வைத்தியர்களும் - புதிய சட்டம்

விளையாட்டுத்துறையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து, சூதாட்டம், போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு மட்டு மல்லாமல், பயிற்சியாளர்கள் மற்றும் வைத்தியர்களுக்கும் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் உருவாக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தர்ர்.

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து தொடர்பான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்த வாரம் நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன். எதிர்காலத்தில் வீரர் ஒருவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தர்ர்.

அத்துடன் அவரின் பயிற்சியாளருக்கும் வைத்தியருக்கும் 2 வருட சிறைவாசம் விதிக்கப்படும் எனவும், போட்டியில் இடம்பெறும் சூதாட்டம் தொடர்பான சட்ட மூலத்தை நான் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளேன். இப்பிரச்சினை தற்போது பாடசாலைகளுக்கும் பரவியுள்ளது. ரகர் மற்றும் உதைபந்தாட்ட போன்ற விளையாட்டுக்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வரும் N;வளையில் அற்ப தொகைக்காக போட்டிகள் காட்டிக் கொடுக்கப்படுகின்றன.

ஆகவே இது தொடர்பான சட்டமூலத்தை நாங்கள் தயாரித்து வருகின்றோம் எனவும், எதிர்வரும் 3 மாதங்களில் இச்சட்டமூலத்தை நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். இலங்கையின் வீரர்களை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கான சட்டமூலங்களை நாங்கள் தயாரித்துள்ளோம் என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தர்ர்.

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிர்வகத்தில் ஆரம்பமான நீச்சல் மற்றும் கரப்ப்ந்தாட்ட பயிற்சியாளர்களுக்கான செயலமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment