Friday, August 23, 2013

இலங்கை தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாடு, 2 ம் பட்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளது - இந்திய ஊடகவியலாளர் குழு!

வடபகுதி தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் வெளியி டப்படும் தகவல்களில் உண்மையில்லையென்பதை நேரில் வந்து பார்த்தவுடன் புரிந்துகொண்டதாக, இலங்கைக்கு வருகைதந்த இந்திய ஊடகவியலாளர் குழு தெரிவித் துள்ளது.

மேலும் இலங்கை தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாடு, 2ம் பட்சத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன், அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும், திருப்திகரமான வாழ்க்கையையும் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பால பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த 30 பேர் கொண்ட இந்திய ஊடகவியலாளர் குழு, நாட்டின் வடக்கு, மாத்தளை, மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர். அங்குள்ள மக்களை சந்தித்து அவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட நிலையிலேயே அவர்கள் குறித்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.

6 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்த நிலை முற்றாக மாறி, அமைதியான சூழலொன்று காணப்படுகிறது. மேலும் வடபகுதி மக்களும் அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்து திருப்தியடைந்துள்ளமை அவர்களை நேரில் சென்று பார்த்தவுடன் வெளிப்பட்டதாக பால பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சர்வதேச ஊடகங்கள், வடபகுதியின் உண்மை நிலவரங்களை இருட்டில் மறைத் துள்ளதாகவும், இந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  August 25, 2013 at 5:29 AM  

Well done Mr.Baskar.Your open hearted comments is greatly appreciated.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com