முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 26 வீடுகள், பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன. (படங்கள் இணைப்பு )
முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற் கொள்ளப்படும் சமூக நலன்புரி திட்டத்தின் மற்றொரு கட்டமாக, இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற வைப வத்தில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ஜயனாத் கொழம்பகே, கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஸ்ரீமா கொழம்பகே உட்பட உயர் கடற்படை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
சுமார் 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயமும், கடற்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. அங்கு மதகுருமார் தங்குவதற்கான இல்லமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதிமேற்றாணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித், பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், முதலாவது தேவ ஆராதனையை நடாத்தினார். மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவின் முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடற்றொழிலில் ஈடுபடும் மக்களுக்கு 10 டிங்கி படகுகளும், பாதுகாப்பு செயலாளரினால் வழங்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தினூடாக, வன்னி மக்கள் பல்வேறு பயன்கள பெற்று வருகின்றனர். வன்னி மக்களின் விவசாயத்தின் தாயாக கிளிநொச்சி இரணைமடு குளம் திகழ்கின்றது.
யுத்தம் மற்றம் இயற்கை அனர்த்தங்களினால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இயற்கை மழையினாலும், பல்வேறு காரணிகளினாலும் இம்மக்கள் சொல்லொனா துன்பங்களை அனுபவித்து வந்தனர். தற்போது யுத்தம் இல்லை. பூரண அமைதி நிலவுகின்றது. மக்கள் மன நிம்மதியுடன் தமது தொழில்களை மேற்கொள்கின்றனர். சீரான காலநிலை இதற்கு கரம் கொடுப்பதாக அமைந்துள்ளது. இவையனைத்தையும் உள்ளடக்கிய வகையில் கிளிநொச்சி மாவட்டம் துரித அபிவிருத்தி கண்டுவருகிறது.
இரணைமடு குளத்தின் வாய்க்கால்கள் மற்றும் விவசாயத்திற்கு நீர் கொண்டு செல்லும் சிறிய ஓடைகள் அனைத்தும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன. பரந்தன் பிரதான விவசாய கால்வாய், கணேசபுரம் உள்வீதி, 13 கிலோ மீட்டர் பிரதேசம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
0 comments :
Post a Comment