25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆங்கிலப் பதிப்பு இன்று அமெரிக்காவில் வெளியீடு!
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா நகரில் இந்திய பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் சார்பில் ஒருநாள் கருத்தரங்கு இன்று நடைபெறுவதுடன் இந்திய பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் சார்பில் சுமார் ஆயிரம் வேத விற்பன்னர்களின் 25 ஆண்டுகால உழைப்பில் 11 தொகுதிகளை கொண்டதாக தயாரிக்கப்பட்ட இந்து மதக் கலைக் களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்படுகிறது.
இந்து மத ஆன்மீக நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், தத்துவங்கள் ஆகியவை தொடர்பாக 7 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைத் தொகுப்புகள் இந்த கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளதுடன் இந்திய வரலாறு, நாகரீகம், மொழி, தத்துவம், கட்டிடக் கலை, இசை, நடனம் உள்ளிட்ட இதரக்கலைகள் மருத்துவம், விஞ்ஞானம், மதம், ஆன்மீகம், இந்து மதத்தில் பெண்களின் பங்கு தொடர்பான ஐயங்களுக்கு தெளிவு அளிக்கும் வகையில் இந்தக்கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் உருவாகியுள்ள கட்டுரைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்திரங்களும், புகைப்படங்களும் இந்து மதக் கலைக் களஞ்சிய தொகுப்பில் இடம் பிடித்துள்ளதுடன் ஒவ்வொரு தொகுப்பும் 600 முதல் 700 பக்கங்கள் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளதுடன் முதல் பதிப்பாக 3 ஆயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கருத்தரங்கில் நோபல் பரிசு பெற்ற ராஜேந்திர பச்சவுரி, இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, இந்திய பாரம்பரிய ஆய்வு நிறுவனத் தலைவரும் பரமார்த்த நிகேத்தன் ஆசிரமத்தின் தலைவருமான சுவாமி சித்தானந்த் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த கலைக் களஞ்சியத்தின் இந்திய பதிப்பை கடந்த 2010 ஆம் ஆண்டு திபத்திய தலைவர் தலாய்லாமா ரிஷிகேஷில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment