டிஐஜி வாஸ் குணவர்த்தனவின் மகனை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் விசாரிக்க அனுமதி.
பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் கொலையுடன் தொடர்புடையதாக நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிந்து நேற்று நேற்று பெப்பிலியான பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டான்.
ரவிந்து குறித்த கொலையுடன் நேரடித் தொடர்பினை கொண்டிருந்தான் என தெரிவிக்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவனை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மன்றின் அனுமதியை கோரினர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுதலை ஏற்ற கொழும்பு மேலதிக நீதிபதி ரவிந்துவை மேலும் 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.
ரவிந்து குறித்த கொலையுடன் நேரடியாக தொடர்பு பட்டிருக்கின்றான் என சில வாரங்களுக்கு முன்னர் நீதிமன்றில் தெரியப்படுத்ததை அடுத்து அவன் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இக்கைது இடம்பெற்றமையும் அவன் நாட்டை விட்டு வெளியேறாதவாறு அவனது கடவுச்சீட்டு முடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment