Sunday, August 4, 2013

தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை.... 22 தூதரகங்களை மூடியது அமெரிக்கா

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 22 நாடுகளில் உள்ள தூதரகங்களையும் அது மூடி விட்டது. மேலும் அமெரிக்கா முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பும், பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அல்கொய்தா அமைப்பின் அரேபிய பிரிவினர் சிலர் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து இந்த அதி வேக நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் பராக் ஒபாமாவே நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான மேல் விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment