22 பாடசாலை பிள்ளைகள் ஒரே தடவையில் ஏற்றிச் சென்ற ஆட்டோ
22 பாடசாலை பிள்ளைகளை ஒரே தடவையில் ஆட்டோவில் ஏற்றிச் சென்றதற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வவுனியா மதவாச்சியைச் சேர்ந்த எம். எ. சமன்குமார பண்டார என்ற ஆட்டோ சாரதிக்கு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சந்திம எதிரிமான்ன 9500 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மீண்டும் இது போன்ற குற்றத்திற்கு கைது செய்யப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிவான் தெளிவில்லாதுள்ள சாரதி அனுமதி பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment