கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதைக் கட்டணம் ரூபா 200
எதிர்வரும் செப்டம்பர் மாதக் கடைசிப் பகதியில் திறந்துவைக்கப்படவுள்ள கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் பயணிக்கும் வாகனமொன்றின் ஒரு பயணத்திற்கு ரூபா 200க்கான கட்டணம் அறவிடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்த அதிவேகப் பாதையில் உள்நுழையும் பிரதான வாயில் புதிய களனிப் பாலத்திற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. அவ்விடம் வரை பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் ஒருநாளைக்கு 30,000 வாகனங்கள் இப்பாதையில் பயணிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(கேஎப்)
0 comments :
Post a Comment