யாழில் விண்ணப்பித்த 2 கட்சி மற்றும் ஒரு சுயட்சைக் குழவினதும் வேட்பு மனு நிராகரிப்பு
வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழில் விண்ணப்பித்த இரண்டு சிங்கள இனவாத அரசியல் கட்சிகளதும், ஒரு சுயட்சைக் குழவினதும் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 11 அரசியல் கட்சிகளும் 9 சுயட்சைக் குழுக்களும் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளனார்.
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைபெறும் நிலையிலேயே இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 13 அரசியல் கட்சிகளும் 10 சுயட்சைக் குழுக்களும் தேர்தல் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தன.
0 comments :
Post a Comment