பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை அவதானிக்க 15 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில்.
நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், அனைத்து நாடுகளும் பங்கேற்பதாக, உறுதியளித்துள்ளன. இதனையொட்டி, மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக, 15 நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த பிரதிநிதிகளின் விசேட கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் நடைபெற்றது.
இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, மாநாட்டின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்தனர். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக நடைபெறும் ஏனைய மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெறும் இடங்களை இவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் ஓர் அங்கமாக இவர்கள் நேற்று, தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கும், பொதுநலவாய அரச தலைவர்கள் பிரதான மாநாடு நடைபெறவுள்ள வோட்டஸ் ஏஜ் ஹொட்டேல் வளாகத்திற்கும் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.
அத்துடன் இம்மாநாட்டுக்கு இணைவாக ஏனைய நிகழ்வுகள் நடைபெறும் பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திற்கும் இவர்கள் விஜயம் மேற்கொண்டு, ஏற்பாடுகளை அவதானித்தனர். இன்றைய தினம், அவர்கள் ஹம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment