புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பேரூந்து நிலையத்திலிருந்து பயணிக்கின்ற தூர இடங்களுக்குச் செல்லும் பேரூந்து ஒன்றிலிருந்து ஒருநாளைக்கு ரூபா 1500 அளவில் இலஞ்சம் பெறப்படும் இரகசியம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்த்தன குறிப்பிடுகிறார்.
இந்த இலஞ்சம் வாங்குதல் பற்றி பேரூந்துச் சங்கங்கள் போக்குவரத்து ஆணைக்குழுக்கு அறியக்கொடுத்துள்ளதாகவும், அமைப்பு ரீதியான குழுவொன்றினாலேயே இந்த இலஞ்சம் வாங்கப்படுவதாகவும், அதனை இல்லாதொழிப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குணவர்த்தன குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் – கொழும்பு பேரூந்துகளிலிருந்தே அதிக இலஞ்சம் பெறப்படும் செய்தியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது எனக் குறிப்பிட்ட தலைவர், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கிணங்க செயற்பட்டதன் விளைவாக இலஞ்சம் பெற்ற பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
(கேஎப்)
No comments:
Post a Comment