கற்பித்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவனுக்கு 4 ஆண்டு தண்டனை!
இங்கிலாந்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி வகுப்பறையின் கதவை பூட்டி பள்ளி ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது மாணவனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 4 ஆண்டு தண்டனை வழங்கியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மாணவனுக்கு ஆசிரியை தனியாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஆசிரியையை கட்டியணைத்த அந்த 14 வயது மாணவன், அவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதுடன் அவனது பிடியில் இருந்து தப்பிக்க கதவருகே ஓடியபோதே கதவு பூட்டப்பட்டு இருந்ததை ஆசிரியர் அறிந்தார்.
இதனை தெரிந்து கொண்ட ஆசிரியை கூச்சல் போட்டதை தொடர்ந்து பள்ளியில் இருந்த இதர ஆசிரியர்கள் கதவை உடைத்து ஆசிரியையை மீட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை அந்த பள்ளிக்கு வருவதையே இந்தச்சம்பவத்துடன் நிறுத்திக்கொண்டு ‘பிஞ்சில் பழுத்த’ அந்த மாணவன் மீது போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் அந்த மாணவன் ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, அங்கிருந்தபடியே சம்பவம் நடந்த பள்ளியில் பயின்று வந்தது தெரியவந்ததை யடுத்து, கோர்ட்டில் அவன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை 4 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment