Tuesday, August 27, 2013

அரியவகை நோயின் தாக்கம்! 14 வயதிலேயே 110 வயது முதியவரை போல தோற்றமளிக்கும் சிறுவன்!

பீகாரை சேர்ந்த ஒரு சிறுவன் அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் 14 வயதிலேயே 110 வயது முதியவரை போல தோற்றமளிக்கிறார். பீகாரை சேர்ந்த அலி ஹசைன் என்னும் 14 வயது சிறுவனே ப்ரோகேரியா என்னும் அரிய வகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சொந்தத்தில் திருமணம் செய்துகொண்ட இவரது தந்தை நபி ஹசைன் கான் மற்றும் தாய் ரசியா ஆகியோருக்கு பிறந்த 8 குழந்தைகளில் 6 பேருக்கு இந்த மரபணு கோளாறு இருந்துள்ளது.

தனது 5 சகோதரர்கள் இதே பாதிப்பால் இறந்ததை கண்ட அலி ஹசைன் தன்னுடைய நாட்களை கஷ்டப்பட்டு நகர்த்திக்கொண்டிருக்கிறார். சராசரியான நபர்களை விட சுமார் 8 மடங்கு அதிக வேகத்தில் வயது முதிர்ந்த தோற்றத்தை அளிக்கும் இந்த நோய், பிறக்கும் 8 மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோய் தாக்கிய நபர்கள் அதிகபட்சமாக 20 வயது வரைமட்டுமே உயிர்வாழ இயலும் என்பதும், இந்த நோயை குணப்படுத்த இன்னும் சரியான மருந்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com