சிரிய இராணுவத்தினரால் பொதுமக்கள் மீது இரசாயன குண்டுத் தாக்குதல்! 1300 பேர் பலி!
சிரியாவில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலில் ஆயிரத்து 300 பேர் கொல்லப்பட் டுள்ளதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தியு ள்ளனர். தலைநகர் டமஸ்கசில், கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பிரதேசங்ளை இலக்கு வைத்து இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பான ஒளிப்பதிவு ஆவணங்களை கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலில் காயங்களுக்குள்ளான சிறுவர்கள் , முதியோர்கள் என நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இராணுவத்தினர் இரசாயன தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை அந்நாட்டு அரச தரப்பினர் மறுத்துள்ளனர்.
இதேவேளை சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் ஆராய, ஐக்கிய நாடுகள் சபையின் இராசாயன ஆய்வுக்குழுவினர் அங்கு விஜயம் செய்துள்ளனர்;. அவர்களின் விசாரணை நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கிலேயே இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை தாக்குதல் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இராசாயன ஆய்வுக்குழுவினர் விரைவில் செல்ல வேண்டுமென அரபு லீக் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை அப்பாவி பொதுமக்களை கொல்லும் சிரிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட வேண்டுமென சிரிய எதிர்கட்சி தலைவர் அஹமது அலட ஜர்யா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment