13 இனை விரைவாக செயற்படுத்த வேண்டும்! அரசைக் கேட்கிறார் கருணா!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும் எனவும் அது தமிழ் மக்களின் உரிமை எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) குறிப்பிடுகிறார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழர்களின் உரிமை என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த உரிமையைப் பெற்றுத் தாருங்கள் என்று அரசாங்கத்தில் இருந்து கொண்டு கேட்க முடியாது என்று யாருக்கும் சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment