Wednesday, August 28, 2013

சர்வதேச மீட்புப் குழுவினர் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்ற தலிபான்கள்

1988ம் ஆண்டு முதல் சர்வதேச மீட்புப் குழு ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமைதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக ஆரம்பித்த நாள் முதல் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வரும் நிலையில் சர்வதேச மீட்புப் குழுவில் உள்ள 6 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான்கள் கடத்திச் சென்று விட்டனர்.

அவர்களை விடுவிக்க ஐ.நா. அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டி பேரம் பேசிய தலிபான்கள், பேரம் படியாததால் அவர்கள் 6 பேரையும் சுட்டுக் கொன்றதுடன் கொல்லப்பட்டவர்களின் பிரேதங்கள் குல்ரன் மாவட்டத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ள அதே சமயம் படிகா மாகாணத்தில் 6 பிரேதங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.

இந்த படுகொலைகளுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. சபையின் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதே சமயம் சர்வதேச மீட்புப் குழுவும் இந்த படுகொலைகளை கண்டித்துள்ளதுடன் இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட சர்வதேச மீட்புப் குழுவின் தலைவர் ஜார்ஜ் ருப், 'ஆப்கானிஸ்தானை பாதுகாப்பான நாடாக மாற்ற பாடுபட்ட சர்வதேச மீட்புக் குழுவின் ஊழியர்கள் 6 பேரை தலிபான்கள் ஈவிரக்கமின்றி கொன்றது போர்க் குற்றத்துக்கு ஒப்பான செயல்.

இதனை கண்டிக்கும் வகையில் எங்கள் குழுவின் மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது' என தெரிவித்தார். இதே வேளை காபூல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக ஆரம்பித்த நாள் முதல் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment