12 அதிரடிப்படை வீரர்களின் விளக்கமறியல் விளக்கமறியல் நீடிப்பு!
கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 அதிரடிப்படை வீரர்களின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மஜிஸ்திரேட் நீதவான் எஸ். சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைகள் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
2006ஆம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்ரையில் வைத்து 5 மாணவர்களையும் கொலை செய்த குற்றச்சாட்டே 12 படை வீரர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment