100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது!
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் இருந்து சுமார் சுமார் 100 கோடிரூபா பெறுமதியான 100 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை சுங்கத் திணைக்களத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதுடன் இந்த கொள்கலனை இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் பிரஜையொருவரும் இலங்கையில் கொள்கலனை பொறுப்பேற்க வந்த இரண்டு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் சுங்க திணைக்களத்தின் இறைவரி செயல ணிக்குழுவின் பணிப்பாளருமான மாலி பியசேன தெரிவித்தார்.
பாகிஸ்தானிலிருந்து கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மேற்படி கொள்கலனில் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் எனினும் சுங்க திணைக்களத்தினர் விசாரணைகளை மிக இரகசியமாக நடத்தியதுடன் கொள்கலனை பொறுப்பேற்க வரும் வரை காத்திருந்தனர்.
நேற்று(30.08.2013) கொல்கலனை பொறுப்பேற்க வந்தபோதே குறித்த கொள்கலன் திறக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment