கஷ்டப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் களின் விடுதிப்
பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக 100 அறைகளைக் கொண்ட ஆசிரிய விடுதித்
தொகுதிகள் மூன்றினை, தென் மாகாணத்தில் நிர்மாணிப்பதற்கு, தென் மாகாண சபையின் கல்வியமைச்சர் சந்திமா ராஸபுத்திர ஆவன செய்துள்ளார்.
இந்த ஆசிரிய விடுதித் தொகுதி ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டத்திலுள்ள
தெனியாய, காலி மாவட்டத்திலுள்ள உடுகம வலயத்திலும் நிர்மாணிப்பதற்கு
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கஷ்டப் பிரதேசங்களில் சேவை செய்வதற்காக பிற இடங்களிலிருந்து வருகின்ற
ஆசிரியர்களின் விடுதிப் பிரச்சினைக்கு தீர்வாக இது அமைவதுடன், அவ்வவ்
மாவட்டங்களில் ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்துதற்கும் முடியுமாக அமைகின்றது.
பின்னர் இவ்விடுதித் தொகுதி மூன்றும் ஆசிரியப் பயிற்சி நிலையங்களாக மாற்றப்படும் எனவும் அமைச்சர் ராஸபுத்திர குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment