Friday, August 9, 2013

பிரான்ஸ்சில் 1 இலட்சம் முட்டைகளை கீழே வீசிய விவசாயிகள்.

பிரான்ஸ் நாட்டு பிரிட்டனி பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துக் காணப்படுவதுடன் இதற்கான பராமரிப்பு செலவுகளும் அதிகரித்துள்ளன இதே வேளை கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் கோழிப் பண்ணைகளில், முட்டையிடும் கோழிகளை இடவசதி மிகுந்த தரம் உயர்ந்த கூண்டுகளில் வைத்துப் பராமரித்தல் வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் உத்தரவு பிறப்பித்திருந்தது

இதற்கு அமைய உற்பத்தி விலையே ஒரு கிலோவிற்கு 95 யூரோ சென்ட் வரும் போது, அரசு இவர்களுக்கு அதற்கு 75 சென்ட் அளிப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே வேளை பிரிட்டனி பகுதியில் முட்டை உற்பத்தியை 5 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தில் அலுவலகத்தின் முன் விவசாயிகள் 1 இலட்சம் முட்டைகளை கீழே வீசி அழித்தனர்.

இது, பிரிட்டனியில் நடைபெறும் 5 சதவிகித முட்டை உற்பத்திக்கு ஈடாகும் என்று குறிப்பிட்ட அவர்கள் தினமும் இதுபோல் செய்யப்போவதாகவும்,அதனால் முட்டைகளின் தேவை அதிகரித்து விலை உயரக்கூடும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர்

No comments:

Post a Comment