ஏறாவூர் சமூக சேவைகளுக்கான பட்டதாரிகள் அமைப் பினர் தமது சமூக சேவைத் திட்டத்தற்கிணங்க இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் A/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள கலைப்பிரிவு மாணவர்களுக்கான இஸ்லாமிய நாகரீக கருத்தரங்கு ஒன்றை நேற்று ஏறாவூர் மட்/மம /அலிகார் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பாடு செய்திருந்தது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்கள் கலந்து கொண்டார்
அத்துடன் இவ் இஸ்லாமிய நாகரீக கருத்தரங்கானது பிரபல ஆசிரியர் அஸ்ஸேஹ் MTM.றிஸ்வி(மஜீதி) அவர்களினால் நடாத்தப்பட்டதுடன், இக்கருத்தரங்கிற்கு ஏறாவூர் மாணவர்கள் மட்டுமன்றி காத்தான்குடி, ஓட்மாவடி மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் A.இஸ்ஸதீன் (அதிபர்-அலிகார் தேசிய பாடசாலை), MAC. ஹிதாயத்துல்லாஹ், NM. நியாமத் பைஸல்(கணக்காளர்), D.அனஸ் (மேஜர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
KSA. Ahmedh
No comments:
Post a Comment