Thursday, July 18, 2013

வேட்பாளர் தெரிவிலும் TNA யினுள் குளறுபடி

பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் தமது முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாகவும் உறுதியான முடிவினை எடுக்கமுடியாமல் தளம்பலடைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு நேற்று(17.07.2013)யாழ்ப்பாணத்தில் நடைபெறுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்திந்தநிலையில் நேற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் காரியாலயத்தில் வேட்பாளர் தெரிவுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வேட்பாளர்களை கட்சிக்குள்ளிலிருந்து தெரிவதா, அல்லது வெளியிலிருந்து தெரிவதா என்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அத்துடன், தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் தெரிவும், கூட்டமைப்புடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளுக்கு குறைந்தளவான வேட்பாளர் தெரிவும் இடம்பெறுமெனவும் இதன்போதும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவை தொடர்பாக உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கமுடியாத நிலையில் மீளவும் இன்றைய தினம் இது தொடர்பாக கலந்துரையாடப்படுவதெனவும், இதன்போது சமூகப் பிரதி நிதிகளையா? அல்லது கட்சி வேட்பாளரையா? நியமிப்பது என்பது தொடர்பாக தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் ஆராய்ப்படவுள்ளது.

No comments:

Post a Comment