தேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதி மஹிந்த மீறுகிறார்-TNA
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டதனையடுத்து தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்களை நாளை(15.07.2013) திங்கட்கிழமை வழங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைக்கான தேர்தல் பிரகடனம் வெளியிடப்பட்டு, வேட்பு மனுக்கள் கோரப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து போர் காரணமாக உயிரிழந்த, காயமடைந்த மற்றும் சொத்துக்களை இழந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவுகளை வழங்கி உள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரச நன்கொடை வழங்கல், உதவிகள் வழங்கல் என்பன தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்குச் சுட்டிக்காட்டியதனையடுத்து தேர்தல் விதிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் நாளை திங்கட்கிழமை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment