Monday, July 22, 2013

விண்டோஸிற்கா​க Google அறிமுகப்படு​த்தும் Chrome App Launcher

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் பல்வேறு சேவைகளையும் விண்டோஸ் கணனிகள் மூலம் இலகுவாக பயன்படுத்துவற்கு Google Chrome App Launcher எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முற்றிலும் இலவசமாக தரப்படும் இம்மென்பொருளானது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுவதுடன் நிறுவிய பின்னர் அதிகளவில் பயன்படுத்தப்படும் கூகுள் சேவைகளுக்கான Icon களை டாக்ஸ் பாரில் அல்லது டெக்ஸ்டொப்பில் வைத்து இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருளானது குரோம் கணனிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com