Thursday, July 18, 2013

மாவட்ட செயலகத்தில் “வீடியோ தொடர்பாடல் ஊடகம்”

சிலிடா என்று அழைக்கப்படும் இலங்கை அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான “வீடியோ தொடர்பாடல் ஊடகம்” யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

சேவை நேரத்தினை மீதப்படுத்தும் நோக்கத்துடன், 2013 ஜுலை 15ஆம் திகதி முதல் “வீடியோ தொடர்பாடல் ஊடகம்” அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த வீடியோ ஊடகத்தின் மூலம் கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளன என்றும், யாழ். மாவட்டத்தில் உள்ள உத்தியோகத்தர்கள் ஏனைய மாவட்டத்தில் உள்ள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடுவதற்கும் ஏனைய 4 மாவட்டங்களில் இந்த வீடியோ ஊடகம் நிறுவப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ தொடர்பாடல் ஊடகத்தின் மூலம் ஏனைய மாவட்ட அரச அலுவல்களின் நடைமுறைகளையும் விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது என மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com