நுவரெலியா சீதைக் கோவில் மாதிரி அலங்காரம் தயார்
இலங்கையை ஆண்ட மன்னன் ராவணன் சீதையை சிறை எடுத்து அங்குள்ள அசோகவனத்தில் சிறை வைத்ததாக ராமாயண காவியத்தில் உள்ளது. எனவே, இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டதுடன் அதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில அரசு செய்துள்ளது.
இக்கோவிலை கட்ட இலங்கையில் உள்ள நகரங்களில் 50 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் இறுதியில் நுவரலியா அருகேயுள்ள திவுரும்பொல என்ற இடத்தில் சீதைக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராவணனை வதம் செய்த பின் சீதையை ராமபிரான் மீட்டார். பின்னர் சீதையை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார். அந்த இடத்தில் தான் தற்போது கோவில் கட்டப்படுகிறது. இதற்காக இந்திய ரூ.2 கோடி செலவில் இக்கோவில் தென்னிந்திய கட்டிட கலை நுட்பத்தில் கட்டப்பட உள்ளது.
அதற்கான அலங்காரத்தை பெங்களூரைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் இதை வடிவமைத்துள்ளார் எனினும் அலங்காரத்தை வடிவமைத்தவரது பெயரை வெளியிட வில்லை என்பதுடன் இலங்கை மற்றும் மத்திய பிரதேச அரசுகளிடையே சுற்றுலா துறையை மேம்படுத்த இக்கோவில் கட்டப்படுகிறது.
இதற்கிடையே இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவதற்கு இலங்கையின் வரலாற்று நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ராவண பாலயா என்ற சிங்கள புத்தமத அமைப்போ சீதையின் கோவில் முன்பு ராவணன் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment