சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினை தாக்க தீவிரவாதிகள் திட்டம்
சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகரா லயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் மேற்கொ ள்ளப்படுவதாக கூறப்படும் கடிதமொன்று, நேற்று முன் தினம் தமக்கு கிடைத்ததாக சென்னையிலுள்ள இலங் கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாட் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு தமக்கு கிடைத்த கடிதம் இந்திய பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமீர் அஜ்வாட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியாவிலுள்ள இலங்கை நிறுவனங்கள் மற்றும் அதில் கடமை புரியும் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக தெரிவித் துள்ளார்.
இதற்கமைய இந்திய பொலிஸார் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment