கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் பல கடற்கரை பாகங்களில் எதிர்வரும் 24 மணி நேரங்களுக்கு அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு மீனவர்களும் கடற்படையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரை யாழ். தொடக்கம் திருகோணமலை வரை மற்றும் மன்னார் வலைகுடா பகுதிகளில் அலையின் வேகம் அதிகரிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன் இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 வரை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment