கிளியில் கிணறு இடிந்ததில் இராணுவீரர் ஒருவர் பலி, ஒருவர் காயம்!
கிளிநொச்சி இரணை மடுவுக்கு அருகே பாழடைந்த கிணற்றுக்குள் இரணை மடு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் இரண்டுபேர் நேற்று(20.07.2013) சனிக்கிழமை நன்பகல் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி இரணை மடுப்பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றில் தண்ணீர் இறைத்துவிட்டு மீன்பிடிக்க இறங்கியிய போது எதிர்பாராதவிதமாக கிணறு இடிந்ததில் சுகத் அமரசிங்க (26 வயது) இராணுவ சிப்பாயொருவர் இடிபாடுகளுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இவருடன் கிணற்றினுள் இறங்கிய மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment