மாமாஸ்மியின் படுகொலையை தொடர்ந்து கடத்தல்காரர்கள் குழப்பம்! காட்டிக்கொடுப்புக்கள் அதிகரிப்பு.
பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மாமாஸ்மியின் படுகொலையை தொடர்ந்து, மாளிகாவத்த பகுதியில் உள்ள ஹெரோயின் கடத்தல்காரர்கள் குழப்ப மடைந்துள்ளதுடன், ஒருவரையொருவர் காட்டிக்கொடுக் கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாளிகாவத்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை, ஒரு தொகை ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர். மாளிகாவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவு கிரேண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, ஒரு தொகை போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேலும் ஒரு தொகை போதைப் பொருளுடன் பெண்ணொருவரும், மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மாளிகாவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரொஹான் பெரேரா தலைமையில் மோசடி தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுகத் சந்தன உட்பட அதிகாரிகள், இம்முற்றுகையை மேற்கொண்டனர்.
0 comments :
Post a Comment