தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக பிரேரணைகளை முன் வைக்கிறது ஜே.வி.பி!
மாகாண சபையைக் கலைத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நீண்டகாலத் திட்டமொன்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமுகமாக குறுகிய காலத் திட்ட மொன்றும் கொண்ட பிரேரணைகளை வெளிக்கொணர்வதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வந்துள்ளனர்.
இம்மாதம் 24 ஆம் திகதி இப்பிரேரணைகள் கொழும்பில் வைத்து நாட்டுமக்கள் வசம் சமர்ப்பிக்கப்படும் என அக்கட்சியின் அரசியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகள் உருண்டோடினாலும், தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுத் தருவதற்குப் பதிலாக அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றிய விவாதத்தை ஆரம்பித்துள்ளது எனக் குறிப்பிடும் ஜே.வி.பியின் பிரசாரக செயலாளர் விஜித்த ஹேரத், இவற்றுள் அகப்பட்டுக்கொள்ளாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் இவ்விடயத்தை நாட்டிலுள்ள புத்திஜீவிகள் அவதானிப்பார்கள் என்ற நம்பிக்கை தமது கட்சிக்கு இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment