பணத்தை உடலில் மறைத்து வெளிநாடு கொண்டு செல்லமுற்பட்டவர் கைது!
கோடியே 28 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பணத்தை உடலில் மறைத்து சிங்கப்பூருக்குக் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்றிரவு 10.30 மணியளவில் பயணிக்கவிருந்த இலங்கையரிடமிருந்தே இப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
53 வயதான ஒருவரே இவ்வாறு சுவிஸ் பிரேங் மற்றும் யூரோ போன்ற வெளிநாட்டுப் பணத்தை உடலில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment