இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கு (படங்கள் இணைப்பு)
வாழைச்சேனை இந்துக்கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்க ஏற்பாட்டில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இலவச கருத்தரங்கு சென்ற (13) சனிக்கிழமை வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு தெ .ஜெயப்பிரதீபன் தலைமையில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ. ஸ்ரீ கிருஷ்ண ராஜா, வளவாளராக பிரபல ஆசிரியர் ந. சந்திரகுமார், கல்லூரியின் பிரதி அதிபர் ஜெ. ஜெயஜீவன், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இக்கருத்தரங்கில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி அயற் பாடசாலை மாணவர்களும் இணைத்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment