மாணவர்களுக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்ளை அதே மாணவர்களுக்கு விலைக்கு விற்ற பிறாட்டு அதிபரும் ஆசிரியர்களும்.
மரணித்தவர் ஞாபகார்தமாக அப்பாவி மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்த பாட புத்தகங்களை அதே மாணவர்களுக்கு கல்லூரி அதிபர் ஒருவர் விலைக்கு விற்பனை செய்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்டூர் பிரதேச பாட சாலை ஒன்றில் இடம் பெற்றுள்ளது. இப்பாட சாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் வறுமையிலும் வறியவர்கள்.இவர்களின் நிலை அறிந்தே இம்மாணவர்களின் கல்விக்காக இந்த உதவி அரச அதிகாரி ஒருவரால் வழங்கப் பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது மண்டூர் மருங்கை நகரை சேர்ந்த காலம் சென்ற திருமதி சிவ ஞானம் இராசம்மா என்பவரின் நினைவாக அன்னாரின் மகன் சி.விவேகானந்தன் என்பவர் ஐந்தாம் தர புலமை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக கடந்த பத்து வருடங்களில் நடை பெற்ற புலமை பரீட்சை வினாத்தாள்களும் அதற்குரிய விடைகளும் உள்ளடங்கலாக தொண்டமானாறு தனு வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களை கொள்வனவு செய்து வறிய மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் படி குறித்த பாட சாலை அதிபரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. யாருக்காக அன்பளிப்பு செய்ய வேண்டுமென்று புத்தகங்கள் வழங்கப் பட்டதோ அவர்களிடமிருந்து ஒரு புத்தகத்துக்கு ரூபா.280 ஒவ்வொரு மாணவரிடமும் இருந்து அதிபர் ஆசிரியர்களால் அறவீடு செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கணக்காய் வாளருக்கு தெரிவித்துள்ளதோடு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் தெரியப் படுத்தியுள்ளனர்.
எமது பிள்ளைகளுக்கு இந்த பெறுமதியான புத்தகத்தை வழங்கியவர் எந்த நோக்கத்தில் வழங்கினாரோ அந்த நோக்கமும் நிறைவேறவில்லை மாணவர்களுக்கும் சுமையை கொடுத்துள்ளனர் இப்பாட சாலை அதிபரும் ஆசிரியர்களும் என பெற்றோரால் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கல்முனை இஸ்ஹாக்
0 comments :
Post a Comment