மான் வேட்டையில் புலி சிக்கியது! புலியிடமிருந்து உயிரை காக்க மரத்தில் தொங்கும் வேட்டையர்கள்!
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவிற்கு சென்ற 6 பேர் கொண்ட குழு அங்குள்ள புலிகளிடம் சிக்கி, மரத்தின் மீது உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது சுமத்ரா தீவில் அமைந்துள்ள லெயுசர் வனவிலங்கு பூங்காவிற்கு அகர்வுட் என்னும் பொருளை தேடி கடந்த வாரம் 6 பேர் சென்றுள்ளனர்.
இந்த குழு, அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த வனவிலங்கு பூங்காவுக்குள் நெடுந்தூரம் ஊடுருவிச் சென்றனர். அப்போது உணவுக்காக மான்களுக்கு வலை விரித்து வைத்திருந்தனர். இரவு நேரத்தில் வலைக்குள் மானுக்கு பதிலாக ஒரு புலிக்குட்டி சிக்கிக்கொண்டது. வலையில் புலிக்குட்டி சிக்கியதை உணர்ந்த அவர்கள், அதை வெளியே எடுக்க முயன்றப்போது, அவர்களை ஒரு புலிக்கூட்டம் சூழ்ந்துக்கொண்டது.
புலிகள் தாக்கியதில், 6 பேரில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மற்ற ஐவரும் மரங்களின் மீது ஏறிகொண்டனர். மரத்தின் அடியில் நின்றபடியே சுமார் 3 நாட்களாக புலிகள் காவல் காப்பதால் கலங்கிப்போன அவர்கள் தங்களின் நிலையை விளக்கி வனத்துறை காவலர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர்.
இந்த தகவலையடுத்து அவர்களை மீட்க வனத்துறையினர் விரைந்துள்ளனர். எனினும், காட்டுப் பகுதியில் வெகுதூரம் அவர்கள் சென்றுள்ளதால் அந்த இடத்தை வனத்துறையினர் சென்றடைய 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப் படுகின்றது.
0 comments :
Post a Comment