Wednesday, July 10, 2013

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு கைதியான பேரறிவாளனின் கோரிக்கை நிராகரிப்பு!

பேரறிவாளன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான கார ணத்தை அவருக்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையம் மறுத்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை நீண்ட நாட்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் பிரியும் நிலை இருப்பதால், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாக வேலூர் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை கடந்த மாதம் 26 ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் சுஷ்மா சிங் பிறப்பித்துள்ள உத்தரவில் கருணை விவகாரங்களில் அதிகாரிகளின் குறிப்புகள், மாநில அரசுகளின் பரிந்துரைகள், பாதிக்கப்பட்டவர்களின் மனு விவரங்கள் போன்றவற்றை கொண்டே குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு விளக்கம் அளிப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே மனுத்தாரரின் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வதாகவும் கூறப்பட் டுள்ளது.

இவை அனைத்து அரசியல் சாசனத்தின் 74வது பிரிவுக்கு கீழ் பாதுகாக்கப் பட்டுள்ளதால் அவற்றை தகவல் ஆணைய விதிகளின் அடிப்படையில் வெளியிட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள ஆணையம், தகவல் ஆணைய விதிகளும் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதே என்று விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment